
Category Archives: tamil poems
நீ யார்
கொஞ்சி விளையாடிடும் மழலை
மாறச் செல்ல மகள்,
குறும்பு சண்டைகள் இட்டாலும் உடன் பிறந்தோரை
வழி நடத்தும் அன்பு சகோதரி ,
என்றும் தொடரும் பொறுப்புகளைச் சுமக்க புறப்பட்ட
தைரியமான ஒரு மனைவி,
குழந்தைகளிடம் அளவில்லா அன்பைக் கொட்டி
அவர்கள் அன்பைப் பெற ஏங்கும் ஒரு தாய்,
இவ்வளவு அடையாளம் இருந்தும் நாம்
அனைவரும் தனிமையில் மகிழ்ச்சியாய் இருக்கிறோமா?
இல்லை இதுதான் நாம் என்று மற்றவருக்காக
வாழ்ந்து வாழ்ந்து நம் வாழ்க்கை
ஒரு பெருமூச்சாய் முடியப் போகிறதா?
உருவாக்கிடுகள் ஒரு பதிலை
மற்றவர் பெயர் சேராமல்
ஒரு தனி அடையாளம், அது
எதுவாகினும் அதுவே என்றும் நீ !
Filed under tamil poems
வெற்றியின் வெறுமை
உன்னை எண்ணி எண்ணி கனவுகள் கண்டேன்
அடைய எண்ணற்ற முயற்சி செய்தேன்
இரவு பகல் பாராது போராடினேன்
ஓடி ஓடியே பழகிய நான்
நீ கிடைத்த அந்த ஒரு நொடி, மறந்தே போனேன்
மகிழ்ச்சி என்னும் ஒன்று உண்டென்று.
Image source: Google search
Filed under tamil poems
குழந்தையின் சிரிப்பு – Baby’s laugh
கேட்க கேட்க திகட்டாத
மழலையின் அழகிய கவிதை -சிரிப்பு
Translation
One beautiful poem
Which you never get bored of ! – Baby’s Laugh
Filed under tamil poems
வறுமையில் ஓர் கனவு
வறுமையின் விளிம்பில் இருந்தும்
கனவுகள் கண்டேன்
இன்று என் மனதை நிறைத்திடும் அவை
நாளை வயிற்றையும் நிறைத்திடும் என்ற நம்பிக்கையில் !!
Filed under haiku, tamil poems
ஏக்கம்
மனம் சின்ன குழந்தையாய்
துள்ளி குதித்திட
ஆனந்த கூத்தாட
எல்லையில்லா மகிழ்ச்சியில்
களித்திருக்க ஏங்கி ஏங்கி
தவித்த காலங்கள் சில,
மற்றும் அவை முழுதும் கற்பனை
காட்சிகளாய் மறைந்த
பொழுதுகளும் பல !!
Filed under poems, tamil poems